top of page

என் பையில் …. (In my bag…)

அம்மாவுக்கு மேட்சிங் ப்ளௌஸ் எடுக்க புடவை 
“பாப்ளின் வாங்காதே! ஏதோ கலம்காரி-னு வருதாம்! அது பாரு!”
அப்பாவுக்கு பாஸ் புக் என்ட்ரி போடணும். 
“பையில் பாஸ் புக் இருக்கா? கவர்-லே எடுத்துக்கோ !
வரக்கொள்ள  கீரை கட்டோட வெச்சு போன மாசம் சொத-சொத-னு ஆச்சு!
ஆ! ஆமாம்! பேங்க் வெளியே நல்ல கீரை கிடைக்குமே!
அது வாங்க பை எடுத்துக்கணும்”
என் கண்ணாடி சரி செய்யணும், போட்டே ரெண்டு வாரம் ஆச்சு.
“அதே  'மணி கடைல' வாட்ச் ரிப்பேர் செய்யலாமே! “
பையனுடைய ஜாமெட்ரி பாக்ஸ்லேந்து வாட்ச் எடுத்தாச்சு
“ஆலப்பாக்கம்லெ பலா நல்லா இருக்கும் வாங்கேன்”-னு 
ஆசையா சொன்னாரே! அதுக்கு டப்பா எடுக்கணும்.
“இன்னிக்கு ஆத்தூர்-லெ சந்தை
காய் அங்கே வாங்கு ! நடக்கணும்-னு டவுன்-லெ வாங்கிடாததே! இந்தா பை !”“சித்தி ! எனக்கு தெக்க மஞ்சள் நூலும் ஊசியும் வேணும். இந்தா ப்ளௌஸ் - இதே மஞ்சள் வேணும்! ““எல்லாம் முடிக்க மதியம் ஆகுமே! இந்த பழையது எடுத்துண்டு போ!”
அத்தை நீட்டிய டப்பா போட்டாச்சு !
பஸ் வந்துடுமோ என்று காலை விரட்டினாலும் ஓடவில்லை. சலிப்பு.
ரெண்டு பஸ் பிடித்து போகணும். வரணும் என்ற சலிப்பு.
இன்று பஸ் ஸ்டாப் செல்ல ஒன்றரை கிலோமீட்டர் நடக்கும் சலிப்பு.
11 வருடம் முன்பு  நிறைமாத கர்பணியாய் வலியுடன் இதே பாதை நடந்த சலிப்பு.
“ஏய்! டவுன் பக்கமா போறியா - எனக்கு சக்கரை மருந்து வாங்கிதாடி, தலை சுத்துது “
அவள் ப்ளௌஸில் பதுக்கிய டாக்டர் சிலிப் என் பையில்
பஸ் பாத்தவுடனே பிடித்தேன் ஒரு ஓட்டம். 
ஏறி இடுப்பில் பை வைத்தேன் - எங்கள் வீட்டின், ஊரின் தேவைகள் நிறைந்த பை
ஊரில் ஒரு கடை, ஒரு சந்தை, ஒரு பேங்க் , ஒரு மெடிக்கல் ..... 

(Translates loosely to...)

The sari that amma wants a matching blouse for
“Don’t buy me the usual poplin! Check out some new fabric”
Appa’s passbook needs an entry from the bank
“Did you put it in a cover in your bag?
Last month you brought it along with fresh spinach !
I spend the whole day trying to dry my passbook”
Oh ! The lady outside the bank sells amazing spinach
Let me carry a little cover to buy some spinach 
Ah! My glasses need to be tightened - haven’t worn it in 2 weeks
“The same Mani stores will also repair watches!”
Picked up the dead watch from my son’s geometry box 
“Alapkkam has amazing jackfruits. Pick up some,”
He asked me affectionately. I have to carry a box for it. 
“There is a market in Aathoor - buy vegetables there.
Don’t buy it in the town market because you are lazy to walk! 
Here are all the covers for vegetables”
“ Aunty ! Can you buy me yellow thread and needle ? here is the blouse bit!
I want the same yellow shade” 
“It will be quite late before you come back! Here, take some curd rice!”
I drop the box that my mother-in-law has packed in to my bag 
Even a fear of missing the bus wasn’t enough to hurry me up. 
I was exhausted. Exhausted from the 1.5kms walk to the bus stop.
I am exhausted from the walk on this path, as a fully pregnant woman,
11 years ago - the walk to the bus stop to deliver at the hospital 
“Hey! Are you headed towards the town? Can you buy me my sugar medicines? 
I am feeling constantly dizzy!”
The medical slip from her blouse has jumped into my bag !
I ran when I saw the bus
I put the bag on my hip as soon I got in - the weight of my home, my village’s needs, wants and desires…
A shop,  a bank, a pharmacy, a market…

77 views0 comments

Recent Posts

See All
bottom of page